ஜூனியர் என்டிஆருக்கு கொரோனா
ADDED : 1611 days ago
தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர் ஜூனியர் என்டிஆர். தற்போது ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுப்பற்றி டுவிட்டரில், ‛‛எனக்கு கொரோனா பாசிட்டிவ் என வந்துள்ளது. கவலைப்பட வேண்டாம். நானும், எனது குடும்பத்தாரும் தனிமைப்படுத்தி கொண்டுள்ளோம். மருத்துவர்கள் அறிவுரைப்படி அனைத்து நெறிமுறைகளையும் நாங்கள் பின்பற்றி வருகிறோம். கடந்த சில நாட்கள் என்னுடன் தொடர்பில் இருந்தவர்களும் கொரோனா பரிசோதனை செய்யுங்கள்'' என பதிவிட்டுள்ளார்.