பிரபாஸின் ஆதிபுருஷ் படப்பிடிப்பு நடத்த எதிர்ப்பு
ADDED : 1611 days ago
ஓம் ராவுத் இயக்கத்தில் பிரபாஸ் - கிர்த்தி சனோன் நடித்து வரும் படம் ஆதி புருஷ். ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்ட கதையில் உருவாகி வரும் இப்படத்தின் இரண்டுகட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்றுள்ளது. அதையடுத்து ஐதராபாத்தில் மீண்டும் படப்பிடிப்பை நடத்த ஹைடெக்கான செட் போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த செட்டில் விரைவில் படப்பிடிப்பை தொடரவும் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் கொரோனா பரவல் காரணமாக தெலுங்கு படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு வரும் நேரத்தில் பிரபாஸ் படத்தின் படப்பிடிப்பு தொடங்கயிருக்கும் செய்திகள் வெளியானதை அடுத்து பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதை அடுத்து படப்பிடிப்பை தொடர்வதா? இல்லை நிறுத்தி வைப்பதா? என்பது குறித்து ஆதி புருஷ் படக்குழு ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.