உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / உதயநிதி படத்தில் ஷிவானி ராஜசேகர்

உதயநிதி படத்தில் ஷிவானி ராஜசேகர்

ஹிந்தியில் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்ற 'ஆர்ட்டிக்கிள் 15' படத்தை தமிழில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க 'கனா' படத்தை இயக்கிய அருண்ராஜா காமராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தின் கதாநாயகியாக தன்யா ரவிச்சந்திரன் நடித்து வருகிறார். படத்தில் உள்ள மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் டாக்டர் ராஜசேகர், ஜீவிதா தம்பதியரின் மகளான ஷிவானி ராஜசேகர் நடிக்க உள்ளாராம். இவர் ஹிப்ஹாப் தமிழா கதாநாயகனாக நடிக்கும் 'அன்பறிவு' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார்.

ஷிவானியின் சகோதரியான ஷிவாத்மிகா, கவுதம் கார்த்திக், சேரன் நடிக்கும் 'ஆனந்தம் விளையாடும் வீடு' படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அக்கா தங்கை இருவருமே ஒரே சமயத்தில் தமிழில் அறிமுகமாக உள்ளார்கள்.

'ஆர்ட்டிக்கிள் 15' படத்துடன் மகிழ் திருமேனி இயக்கும் ஒரு படத்திலும் உதயநிதி நடித்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !