உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்ட ரஜினி

கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்ட ரஜினி

சென்னை : நடிகர் ரஜினிகாந்த் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டார். இந்த தகவலை அவரது மகள் சவுந்தர்யா டுவிட்டரில் போட்டோ உடன் பகிர்ந்துள்ளார்.

கொரோனா இரண்டாவது அலை இந்தியாவில் அதிதீவிரமாகி உள்ளது. நோயை கட்டுப்படுத்த ஊரடங்கு விதிக்கப்பட்டிருந்தாலும் கொரோனாவுக்கான தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரமாகி உள்ளது. பொதுமக்கள் உடன் திரைப்பிரபலங்கள் பலரும் கொரோனா தடுப்பூசியை ஆர்வமாய் எடுத்து வருகின்றனர். ஏற்கனவே 60 வயதை கடந்த கமல், சரத்குமார் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர். தற்போது இளம் நடிகர்களும் தடுப்பூசி எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளார். சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வந்த நடிகர் ரஜினிகாந்த் நேற்று தான் ஐதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை திரும்பினார். இன்று(மே 12) தனது இல்லத்தில் கொரோனாவுக்கான தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளார். இது அவரின் இரண்டாவது கட்ட தடுப்பூசி என தெரிகிறது.

இதுப்பற்றி அவரது மகள் சவுந்தர்யா டுவிட்டரில், ‛‛நம்ம தலைவர் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டார். கொரோனாவுக்கு எதிரான போரில் நிச்சயம் நாம் வெல்வோம். அனைவரும் மாஸ்க் அணியுங்கள், பாதுகாப்பாக வீட்டிலேயே இருங்கள்'' என பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !