நாகார்ஜுனா படம் மூலம் தெலுங்கில் நுழையும் சோனாக்சி சின்ஹா
ADDED : 1609 days ago
தெலுங்கில் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன் நாகார்ஜூனா இரட்டை வேடங்களில் நடித்து வெளியாகி ஹிட்டான படம் 'சோக்காடே சின்னி நாயனா'. இந்தப்படத்தில் இரண்டு வேடங்களில் நடித்திருந்தார் நாகார்ஜுனா. அறிமுக இயக்குரான கல்யாண் கிருஷ்ணா என்பவர் இந்தப்படத்தை இயக்கியிருந்தார்.
இந்தப்படத்தின் இரண்டாம் பாகம் துவங்கப்பட போகிறது என கடந்த இரண்டு வருடங்களாகவே சொல்லப்பட்டு வந்தது.. நாகர்ஜுனாவும் கூட சில பேட்டிகளில் இதை உறுதிப்படுத்தி இருந்தார். இந்தநிலையில் இந்தப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் துவங்கி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக நடிப்பதன் மூலம் பாலிவுட் நடிகை சோனாக்சி சின்ஹா தெலுங்கு திரையுலகில் கதாநாயகியாக அடியெடுத்து வைக்க உள்ளாராம்.