இதுவரை நடிக்காத ஒரு கேரக்டரில் பூஜா ஹெக்டே
ADDED : 1609 days ago
பூஜா ஹெக்டே தற்போது தெலுங்கில் நடித்து வரும் படங்கள் இரண்டு. ஒன்று பிரபாஸ் ஜோடியாக நடிக்கும் ராதே ஷ்யாம்.. இன்னொன்று அகில் நாகார்ஜுனா ஜோடியாக நடித்து வரும் மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர்.. இதில் இதுவரை எந்த கதாநாயகிகளும் நடித்திராத, ஒரு வித்தியாசமான கேரக்டரில் தான் நடித்து வருகிறாராம் பூஜா ஹெக்டே. ஆம். இந்தப்படத்தில் முதன்முறையாக ஸ்டாண்ட் அப் காமெடியனாக நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே.
இதுபற்றி சமீபத்தில் பூஜா ஹ்க்டே கூறியபொழுது, “படத்தில் எனக்கான வசனங்கள் ரொம்பவே நீளமாக இருந்தன. அதுமட்டுமல்ல சில வசனங்களை சிங்கிள் டேக்கில் பேசி நடிக்கவேண்டி இருந்தது. மொத்தத்தில் ஒரு கடினமான பணியாக இருந்தது என்று சொல்லலாம்” என கூறியுள்ளார். இந்தப்படத்தை பொம்மரிலு பாஸ்கர் இயக்கி வருகிறார்.