உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆன்டி இண்டியன் - புளூ சட்டை மாறனுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்

ஆன்டி இண்டியன் - புளூ சட்டை மாறனுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்

தென்னிந்திய சினிமாக்களில் வெளியாகும் பெரும்பாலான படங்களை விமர்சனம் என்ற பெயரில் யூடியூப் சேனலில் துவம்சம் செய்து வருபவர் புளூ சட்டை மாறன். இதனால் சினிமா உலகில் அவருக்கு மிகப் பெரிய எதிர்ப்பு இருந்து வருகிறது. இந்த நிலையில், நானும் ஒரு படம் எடுக்கப் போகிறேன் என்று களமிறங்கினார் மாறன். அதையடுத்து ஊரில் வெளியாகும் படங்களையெல்லாம் கண்டபடி விமர்சிக்கும் இவர் எடுக்கும் படம் எப்படி இருக்கப் போகிறது என்பதை பார்ப்போமே என்று கோலிவுட்டில் பல பிரபலங்களும் காத்திருக்கிறார்கள்.

இப்படியான நிலையில் பலவிதமான எதிர்ப்புகள், சவால்களுக்கு மத்தியில், கதை திரைக்கதை வசனம் எழுதி இசையமைத்து ஆன்டி இண்டியன் என்ற படத்தை இயக்கியுள்ளார் புளூ சட்டை மாறன். இதில் பல யுடியூப் பிரபலங்கள் நடித்துள்ளனர். ஆனால் இந்த படத்தை அவர் மத்தியில் ஆளும் பாஜக அரசை விமர்சித்து எடுத்திருப்பதாக சொல்லி சென்சார் போர்ட்டில் தணிக்கை செய்வதற்கு மறுத்து விட்டனர்.

இப்படியான நிலையில் தற்போது ஆன்டி இண்டியன் படத்தின் மோஷன் போஸ்டர் ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில் புளூ சட்டை மாறனுக்கு கண்ணீர் அஞ்சலி ஒட்டப்பட்டிருப்பதும் வெளியிடப்பட்டுள்ளது. அதைப்பார்த்து, படமே இன்னும் வெளியே வரல, அதற்குள்ளேயே கண்ணீர் அஞ்சலி போஸ்டரா? என்று அந்த போஸ்டருக்கு பலரும் கமெண்ட் கொடுத்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !