தெலுங்கு பட இயக்குனர் கொரோனாவால் மரணம்
ADDED : 1842 days ago
தற்போது தீவிரமாகி வரும் கொரோனா இரண்டாவது அலைக்கு ஏழை பணக்காரன், பிரபலம் என்கிற பாகுபாடு இல்லாமல், பல உயிர்கள் பலியாகி வருகின்றன. திரையுலகில் உள்ள வயதானவர்கள் மட்டுமல்ல, இளம் வயது நபர்களும் கொரோனா தொற்றால் மரணத்தை தழுவி வருவது அதிர்ச்சி அளித்துள்ளது. இதில் சமீபத்திய நபராக தெலுங்கு திரையுலகை சேர்ந்த இயக்குனர் நந்தியாலா ரவி என்பவர் கொரோனா தொற்று காரணமாக இன்று காலை மரணமடைந்துள்ளார்.
இவர் நாக சவுர்யா நடித்த.லட்சுமி ராவே மா இன்டிகி மற்றும் ஓரே புஜ்ஜிகா உள்ளிட்ட சில படங்களை இயக்கியுள்ளார். கொரோனா தோற்று காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சில நாட்களாகவே சிகிச்சை எடுத்து வந்த இவர், இன்று காலை சிகிச்சை பலனின்றி மரணத்தை தழுவியுள்ளார். நடிகர் நாக சவுர்யா இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.