டிவி நடிகர் குட்டி ரமேஷ் காலமானார்
ADDED : 1607 days ago
கொரோனா காலக்கட்டத்தில் இந்நோயாலும், பிற உடல்நலக் குறைவாலும் பல திரைப்பிரபலங்கள் மரணம் அடைந்துள்ளனர். அதிலும் கடந்த ஒரு வாரமாக தினம் ஒரு பிரபலங்கள் மறைந்து வந்தனர். நேற்று சின்னத்திரை நடிகர் குட்டி ரமேஷ் உடல்நலக் குறைவால் காலமானார். தமிழில் ஏராளமான சீரியல்களிலும், சினிமாவில் பல படங்களில் குணச்சித்ர வேடங்களிலும் இவர் நடித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் தேன்மொழி பிஏ., என்ற சீரியலில் நாயகியின் அப்பாவாக நடித்து வந்தார்.