தெலுங்கில் ரீ-மேக் ஆகும் தேன்
ADDED : 1608 days ago
கணேஷ் விநாயகன் இயக்கத்தில் தருண் குமார், அபர்ணதி நடிப்பில் வெளியாகி பாராட்டை பெற்ற படம் ‛தேன்'. இப்படம் இப்போது தெலுங்கில் ரீ-மேக் ஆக உள்ளது. கணேஷ் விநாயகனே இயக்க உள்ளார். இதில் நாயகனாக ஆதியை நடிக்க வைக்க பேசி வருகின்றனர். இவர் ஏற்கனவே தமிழில் மிருகம், ஈரம், மரகதநாணயம் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தவர் ஆவார். தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார்.