மகேஷ்பாபு படத்தில் இரண்டு இசையமைப்பாளர்கள்
ADDED : 1701 days ago
ஹிந்தியில் பாடல்களுக்கு ஒருவர், பின்னணி இசைக்கு ஒருவர் என ஒரே படத்திற்கு இரண்டு இசையமைப்பாளர்கள் பணிபுரிவது சர்வ சாதாரணம்.. அதேசமயம் தெலுங்கில் பிரபாஸ் நடித்த சாஹோ மற்றும் தற்போது அவர் நடித்து வரும் 'ராதே ஷ்யாம்' ஆகிய படங்களுக்கும் இந்த இரட்டை இசையமைப்பாளர் முறை தான் பின்பற்றப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் தற்போது மகேஷ்பாபுவின் படத்திலும் இந்தமுறையை பின்பற்ற முடிவு செய்துள்ளார் இயக்குனர் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ். மகேஷ்பாபுவை வைத்து அடுத்து தான் இயக்கவுள்ள படத்திற்கு, தேவிஸ்ரீபிரசாத் மற்றும் எஸ்.எஸ்.தமன் என இரண்டு பேரை வைத்து இசைப்பணிகளை மேற்கொள்ள இருக்கிறாராம். பாடல்களை தேவிஸ்ரீ பிரசாத் கவனிக்க, தமன் பின்னணி இசை பொறுப்பை ஏற்கிராராம்.