நிவின்பாலி படத்துக்காக தொப்பை வளர்த்த பாடி பில்ட் நடிகர்
ADDED : 1653 days ago
கடந்த சில வருடங்களுக்கு முன் மலையாளத்தில் 'மை லைப் பார்ட்னர் என்கிற படத்தில் ஓரினச்சேர்க்கையாளராக நடித்து சிறந்த நடிகருக்கான கேரளா அரசு விருது பெற்றவர் இளம் நடிகர் சுதேவ் நாயர். ஆனால் அடுத்ததாக பிருத்விராஜூடன் இணைந்து நடித்த 'அனார்கலி' படத்தின் மூலம் தான் இவர் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானார்.
இந்தநிலையில் நிவின்பாலி நடித்துவரும் துறைமுகம் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சுதேவ் நாயர். இந்தப்படத்தில் தனது கதாபாத்திரத்திற்காக தொப்பை வளர்த்து நடித்துள்ளார் சுதேவ் நாயர். இயல்பிலேயே பாடி பில்டரான சுதேவ் நாயருக்கு உடல் எடையை கூட்டுவதும் குறைப்பதும் கைவந்த கலை என்பதால், ரொம்பவே எளிதாக தொப்பை வளர்த்து, தற்போது அதை கரைத்து ஸ்லிம் ஆகவும் மாறிவிட்டார்.