“ராஜமவுலி கோடரி எடுத்துக்கிட்டு துரத்துவார்' : ஜூனியர் என்டிஆர் கலாட்டா
ADDED : 1608 days ago
கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியின் இயக்கத்தில் தான் நடித்து வரும் 'ஆர்ஆர்ஆர்' படத்துக்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்டு நடித்து வருகிறார் நடிகர் ஜூனியர் என்டிஆர். இந்தப்படத்திற்காக தனது உடல் எடையை, குறிப்பாக கைகளின் தசையை மட்டும் கணிசமாக ஏற்றி ஆக்சன் காட்சிகளில் நடித்துள்ளார் ஜூனியர் என்.டி.ஆர்.
சமீபத்தில் ஒரு பேட்டியில் இந்த தகவலை பகிர்ந்து கொண்ட ஜூனியர் என்டிஆரிடம் படம் குறித்து இன்னும் சில அப்டேட் தகவல்களை கொடுக்குமாறு கேட்டனர். அதற்கு பதிலளித்த ஜூனியர் என்டிஆர், “இப்போது நான் சொன்னதே அதிகம்.. இந்த பேட்டியை ஒருவேளை ராஜமவுலி படிக்க நேர்ந்தால் (அவர் நிச்சயம் படித்து விடுவார்) இந்த தகவலை சொன்னதற்காக கோடரியை எடுத்துக் கொண்டு என்னை துரத்துவார்” என கலாட்டாவாக பதில் அளித்துள்ளார்