3 கோடி பார்வைகளைக் கடந்த ஹிந்தி 'அசுரன்'
                                ADDED :  1628 days ago     
                            
                             வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சுவாரியர் மற்றும் பலர் நடித்து வெளிவந்த படம் 'அசுரன்'. இப்படத்தை அதே பெயரில் ஹிந்தியில் டப்பிங் செய்து யு-டியுபில் கடந்த மார்ச் மாதம் வெளியிட்டனர்.
இரண்டு மாதங்களுக்குள்ளாகவே யு-டியுபில் இப்படம் 3 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது. நம்ம ஊர் கதைக்களத்துடன், நமது கிராமத்துக் கதாபாத்திரங்களுடன் உருவாக்கப்பட்ட படத்திற்கு ஹிந்தியில் இப்படி ஒரு வரவேற்பு கிடைத்துள்ளது ஆச்சரியப்பட வைக்கிறது.  படத்தைப் பார்த்துள்ள பல வட இந்திய ரசிகர்களும் தனுஷையும், படத்தையும் வெகுவாகப்ப ராட்டியுள்ளனர். 
'அசுரன்' படத்திற்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து தற்போது தனுஷ் நடித்து கடந்த மாதம் வெளிவந்த 'கர்ணன்' படத்தையும் ஹிந்தியில் டப்பிங் செய்யும் வேலைகளை ஆரம்பித்துள்ளார்களாம். விரைவில் 'கர்ணன்' படமும் ஹிந்தியில் வெளியாக உள்ளது.