உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கமல் கட்சியில் இருந்து வெளியேறியவர்களை சாடிய சனம் ஷெட்டி

கமல் கட்சியில் இருந்து வெளியேறியவர்களை சாடிய சனம் ஷெட்டி

தமிழ், தெலுங்கில் பல படங்களில் நடித்திருந்தபோதும், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ்-4 நிகழ்ச்சி மூலம் பெரிய அளவில் பிரபலமானவர் சனம் ஷெட்டி. இவர் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து வெளியேறியவர்களை டுவிட்டர் வாயிலாக விமர்சித்துள்ளார்.

அதில், ‛‛மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட்டபோது எதற்காக கட்சியில் சேர்ந்தீர்கள் என மக்களிடத்தில் பேசினீர்கள். ஆனால் இப்போது கட்சியில் இருந்து வெளியேறும்போது எதுவும் சொல்லாமல் தனிப்பட்ட காரணம் என்று சொல்லி வெளியேறியது ஏன்? வெற்றி பெற்றிருந்தால் நீங்கள் விலகியிருப்பீர்களா? என்று கமல் கட்சியில் இருந்து வெளியேறிய மகேந்திரன், சந்தோஷ்பாபு, பத்மப்பிரியா ஆகியோரைப் பார்த்து கேள்வி எழுப்பியுள்ளார் சனம்.

அதோடு, கமல்ஹாசன் அதிகாரத்திற்கு வர வேண்டிய அவசியமில்லை. அவரது தொலைநோக்கு பார்வை ஒன்றே போதும் என்றும் அவரை பாராட்டியுள்ளார் சனம் ஷெட்டி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !