உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆக்ஸிமீட்டரை எப்படி பயன்படுத்த வேண்டும்? - பூஜா ஹெக்டே விளக்கம்

ஆக்ஸிமீட்டரை எப்படி பயன்படுத்த வேண்டும்? - பூஜா ஹெக்டே விளக்கம்

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 65ஆவது படத்தில் நாயகியாக நடிப்பவர் பூஜா ஹெக்டே. சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டுள்ளார். இந்நிலையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோர் உடலின் ஆக்சிஜன் அளவை கண்டறியும் பல்ஸ் ஆக்ஸிமீட்டரை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்த ஒரு வீடியோவை தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

அவர் கூறுகையில், உங்கள் கைகளை நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும். ஐந்து நிமிடங்கள் கழித்து கையில் உள்ள ஆள்காட்டி அல்லது நடு விரலில் ஆக்ஸிமீட்டரை பொறுத்த வேண்டும். அதையடுத்து உங்களது இதயத்திற்கு அருகே அந்த மீட்டரை சில நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். அதன்பிறகு மீட்டரை எடுத்து பார்க்க வேண்டும். அதில் எவ்வளவு எண்ணிக்கை பதிவாகியுள்ளது என்பதை அறிய வேண்டும். இதை நான் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருந்தபோது மருத்துவர் எனக்கு சொல்லிக் கொடுத்தார். அதை நான் உங்களுக்கும் ஷேர் செய்திருக்கிறேன். கொரோனாவில் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டர்களுக்கு இது பெரிதும் பயனாக இருக்கும். நான் எனது ஆக்சிஜன் அளவை அறிந்து கொள்ள இது உதவியாக இருந்தது என்றும் தெரிவித்துள்ளார் பூஜா ஹெக்டே.




தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !