பாடலாசியர் தேன்மொழிக்கு கொரோனா
ADDED : 1603 days ago
தமிழ் சினிமாவில் பெண் பாடலாசிரியர்கள் மிகவும் குறைவு. தாமரைக்கு அடுத்து அதிக பாடல்களை எழுதியவர் தேன்மொழி தாஸ். பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். கண்களால் கைது செய், அடுத்த சாட்டை, காதலிக்க நேரமில்லை உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட படங்களில் பாடல்களை எழுதியவர்.
இசையில்லாத இலையில்லை, அநாதி காலம், ஒளியறியாக் காட்டுக்குள், நிராசைகளின் ஆதித்தாய் , காயா, வல்லபி, உள்ளிட்ட பல கவிதை நூல்களை எழுதியிருக்கிறார்.
தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தேன்மொழி தாஸ் கிண்டியில் உள்ள கிங்ஸ் இன்ஸ்டிடியூட் மருத்துவமனையில் கடந்த ஐந்து நாட்களாக சிகிச்சையில் உள்ளார். இந்த தகவலை வெளியிட்டுள்ள இயக்குனர் களஞ்சியம், அவருக்கு தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என்று தனது டுவிட்டரில் கேட்டுக் கொண்டிருக்கிறார்.