ஒரே ஷாட்டில் உருவாகும் படத்தில் பிரியங்கா ருத்
ADDED : 1598 days ago
ஜீ தமிழில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா தொடரில் நித்யா என்ற கேரக்டரில் நடித்து புகழ்பெற்றவர் சாய் பிரியங்கா ருத். கேளடி கண்மணி, கல்யாணமாம் கல்யாணம் தொடர்களில் நடித்தார். அதன் பிறகு சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார்.
கேங்ஸ் ஆப் மெட்ராஸ் படத்தில் அறிமுகமானவர் , எனக்கு வாய்த்த அடிமைகள் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பயமறியா பிரம்மை என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். அது விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. இன் தி நேம் ஆப் காட் என்ற தெலுங்கு வெப்சீரிஸிலும் நாயகியாக நடித்துள்ளார்.
இந்த நிலையில் ஒத்த செருப்பு படத்திற்கு பிறகு பார்த்திபன் இயக்க உள்ள இரவின் நிழல் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இது ஒரே ஷாட்டில் எடுக்கப்படும் படமாகும். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது.