ராதே ஷ்யாம் படத்திற்காக பிரபாஸ் - பூஜா ஹெக்டே மீண்டும் டூயட்!
ADDED : 1682 days ago
ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ்-பூஜா ஹெக்டே நடித்து வரும் படம் ராதே ஷ்யாம். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மூன்றரை ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், ஜூலை மாதம் வெளியிடவும் திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், ராதே ஷ்யாம் படத்தின் ஹிந்தி உரிமையை ரூ. 120 கோடிக்கு வாங்கியுள்ள டி-சீரிஸ் நிறுவனம் இப்படத்தில் ஏற்கனவே ஒரு டூயட் பாடல் இருந்தபோதும் இன்னொரு காதல் பாடல் வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளதாம். அதனால் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில், அடுத்தபடியாக லாக்டவுன் முடிந்த பிறகு மீண்டும் பிரபாஸ் - பூஜா ஹெக்டே நடிக்கும் இன்னொரு டூயட் பாடல் காட்சி ராதே ஷியாம் படத்திற்காக படமாக்க தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.