தேன்கூடாக மாறிய ஏஞ்சலினா ஜூலி
ADDED : 1599 days ago
சமீபகாலமாக நடிகைகள் மாறுபட்ட உடையணிந்து வித்தியாசமான கோணங்களில் தங்களை வெளிப்படுத்தும் போட்டோ சூட்களை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் ஹாலிவுட் நடிகையான ஏஞ்சலினா ஜூலி, தனது உடம்பில் 100 கணக்கான தேனீக்களை மொய்க்க விட்டு ஒரு போட்டோ சூட் நடத்தியுள்ளார். அப்போது வெள்ளை நிறத்தில் உடையணிந்துள்ள எஞ்சலினாவின் உடை மற்றும் அவரது கழுத்து, மார்பு உள்ளிட்ட பகுதிகளில் தேனீக்கள் அமர்ந்திருக்கின்றன. தேனீக்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுக்காக இப்படி ஒரு போட்டோவுக்கு கூலாக போஸ் கொடுத்து அசத்தியுள்ளார் ஏஞ்சலினா. பத்திரிகை இதழுக்காக இந்த போட்டோ ஷூட்டை அவர் நடத்தியுள்ளாராம்.