ஜெயராம், காளிதாஸ் இணைந்து நடத்துள்ள படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
மலையாள திரையுலகில் மட்டுமின்றி சமீப காலமாக தமிழ் மற்றும் தெலுங்கிலும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் நடிகர் ஜெயராம். அவரது மகன் காளிதாஸ் ஜெயராம் மலையாளத்தை விட தமிழில் அதிக முக்கியத்துவம் கொடுத்து படங்களை நடித்து வருகிறார். குறிப்பாக 'பாவ கதைகள், விக்ரம், நட்சத்திரம் நகர்கிறது' உள்ளிட்ட படங்கள் அவருக்கு தமிழில் ஒரு நல்ல வரவேற்பை கொடுத்தன. இந்த நிலையில் தற்போது தனது தந்தை ஜெயராமுடன் காளிதாஸ் மலையாளத்தில் 'ஆசைகள் ஆயிரம்' என்கிற படத்தில் இணைந்து நடித்துள்ளார்.
2020ல் வெளியான 'புத்தம் புது காலை' படத்தை தொடர்ந்து இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் படம் இது. இந்த நிலையில் தற்போது இந்த படம் வரும் பிப்ரவரி 6ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. நிவின்பாலி நடித்த 'ஒரு வடக்கன் செல்பி' படத்தை இயக்கிய ஜி பிரஜித் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். திரிஷ்யம் புகழ் நடிகை ஆஷா சரத் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.