ரம்பா மகளா இவர்... : பிறந்தநாள் கொண்டாடிய லான்யா
ADDED : 1 days ago
90களில் பிஸியான நடிகையாக இருந்த ரம்பா, பின்னர் கனடா தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டிலானார். திருமணமாகி 16 ஆண்டுகள் ஆகிறது. 3 குழந்தைகளுக்கு தாயாக உள்ள இவர், சில சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பங்கேற்றிருக்கிறார். சினிமாவிலும் மீண்டும் என்ட்ரி கொடுக்க ஆயத்தமாகி வருகிறார்.
இந்த நிலையில் கனடாவில் 9ம் வகுப்பு படித்து வரும் இவரது மகள் லான்யா, நேற்று தனது பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. நடிகை தேவயானி மூத்த மகள், பிரசாந்த் படத்தில் நடித்து வருவது போல், 'குட்டி ரம்பா'வாக பிரதிபலிக்கும் லான்யாவும் விரைவில் சினிமாவில் நடிக்க வந்தாலும் ஆச்சர்யம் இல்லை.