உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரவிதேஜா படம் மூலம் தெலுங்கில் நுழையும் கர்ணன் நாயகி

ரவிதேஜா படம் மூலம் தெலுங்கில் நுழையும் கர்ணன் நாயகி

தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தவர் மலையாள நடிகை ரஜிஷா விஜயன். இந்தப்படத்தில் இவருக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, அடுத்ததாக பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் 'சர்தார்' படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடிக்க உள்ளார் என்று சொல்லப்படுகிறது. தவிர, 'கூட்டத்தில் ஒருவன்' படத்தை இயக்கிய டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில், சூர்யா கவுரவ வேடத்தில் நடிக்கும் படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார் ரஜிஷா.

மலையாளத்தில் இருந்து தமிழில் நுழைந்து பெயர் பெற்றபின் தெலுங்கு சினிமாவில் அடியெடுத்து வைப்பது தான் மலையாள நடிகைகளின் வழக்கம்'. அந்தவகையில் அசின், நயன்தாரா பாணியில் ரஜிஷா விஜயனும் தற்போது தெலுங்கில் நுழைய இருக்கிறார். அறிமுக இயக்குனர் சரத் மாந்தவா என்பவர் இயக்கத்தில் ரவிதேஜா நடிக்கும் படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம் ரஜிஷா விஜயன். இந்தப்படத்தில் கதாநாயகியாக திவ்யான்ஷா கவுசிக் என்பவர் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !