கோவிட் 19 நோயாளிகளுக்காக நிதி அகர்வால் தொடங்கும் தொண்டு நிறுவனம்!
ADDED : 1693 days ago
ஈஸ்வரன், பூமி படங்களில் நடித்த நிதி அகர்வால் தற்போது தெலுங்கில் பவன் கல்யாணுடன் ஹரி ஹர வீர மல்லு என்ற சரித்திர படத்தில் நடித்து வருகிறார். தற்போது கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல நடிகர், நடிகைகள் ஆன்லைன் மூலம் உதவிகள் செய்து வருகிறார்கள். இந்நிலையில் நிதி அகர்வாலோ, கொரோனா நோயாளிகளுக்கு சேவை செய்வதற்காகவே டிஸ்டிரிப்ட் லவ் என்ற பெயரில் ஒரு தொண்டு நிறுவனம் தொடங்க உள்ளார். இதில் ஒரு குழுவை நியமித்து எந்தெந்த பகுதிகளில் உள்ள நோயாளிகளுக்கு என்னென்ன உதவிகள் தேவைப்படுகிறது என்பதை அறிந்து உடனுக்குடன் இந்த நிறுவனத்தின் மூலம் உதவி செய்யப் போகிறாராம் நிதி அகர்வால்.