உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சூர்யாவின் 40வது படம் எப்படி இருக்கும்? - பாண்டிராஜ் பதில்

சூர்யாவின் 40வது படம் எப்படி இருக்கும்? - பாண்டிராஜ் பதில்

சூரரைப்போற்று படத்தை அடுத்து பாண்டிராஜ் இயக்கும் தனது 40ஆவது படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம், சிவகார்த்திகேயன் நடித்த நம்ம வீட்டுப்பிள்ளை படங்களைப்போன்று இந்த படத்தையும் கிராமத்து கதையில் இயக்குகிறார் பாண்டிராஜ்.

என்றாலும் இந்த படம் குறித்த அப்டேட்களை வெளியிடாமல் இருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் இணையத்தில் சூர்யாவின் ரசிகர்கள் சூர்யா-40 படம் குறித்து பாண்டிராஜிடத்தில் கேள்வி எழுப்பினர். அப்போது, கார்த்தியை வைத்து நான் இயக்கிய கடைக்குட்டி சிங்கம் படத்தைப்போலவே இந்த படமும் இருக்கும். அந்த படத்தை எப்படி நீங்கள் கொண்டாடினீர்களோ அதேபோல் இந்த படத்தையும் கொண்டாடுவீர்கள். அப்படியொரு படமாகத்தான் சூர்யா-40வது படமும் இருக்கும் என்று தெரிவித்துள்ளார் பாண்டிராஜ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !