இன்னும் படங்களில் நடிக்க ஆண்டவன் மனது வைக்கணும் : ரஜினி
ADDED : 1634 days ago
சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்துள்ளார் ரஜினி. கொரோனா பிரச்னையால் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக தடைப்பட்டு தடைப்பட்டு நடந்த படப்பிடிப்பு ஒரு வழியாக முடிந்துள்ளது. இந்நிலையில் ஐதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்பு தளத்தின் கடைசிநாளில் ரஜினி படக்குழு உடன் பேசியதாக ஒரு தகவல் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ரஜினி பேசியதாவது : ‛‛இன்னும் சில படங்களில் நடிக்க ஆசை உள்ளது. கொரோனா பிரச்னை முடிந்த பின்னர் அந்த எண்ணம் சாத்தியமாகும். எனது உடல்நிலையும் அதற்கு ஒத்துழைக்க வேண்டும். இவை எல்லாம் நடக்க கடவுள் தான் மனது வைக்க வேண்டும். ‛அண்ணாத்த' படம் இறுதிக்கட்டத்தை எட்டியது மகிழ்ச்சி. அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக இருங்கள், குடும்பத்தினரையும் பாதுகாப்பாக கவனித்து கொள்ளுங்கள்'' என்றாராம்.