உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / லூசிபர் ரீமேக்கை கைவிடுகிறார் சிரஞ்சீவி ?

லூசிபர் ரீமேக்கை கைவிடுகிறார் சிரஞ்சீவி ?

மலையாளத்தில் கடந்த 2019-ல் மோகன்லால் நடிப்பில், முதன்முதலாக நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் வெளியான லூசிபர் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்தப்படத்தை பார்த்த நடிகர் ராம்சரண், இது தனது தந்தை சிரஞ்சீவிக்கு பொருத்தமான கதையாக இருக்கும் என இந்த படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை உடனடியாக கைப்பற்றினார்.. இந்தப்படத்தை இயக்குனர் சுகுமார் இயக்கினால் நன்றாக இருக்கும் என விரும்பினார் சிரஞ்சீவி..

ஆனால் அவரோ அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தை இரண்டு பாகங்களாக எடுக்கும் முயற்சியில் பிசியாக இருந்ததால், சாஹோ பட இயக்குனர் சுஜீத் வசம் இதன் டைரக்சன் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. அதன்பின் இயக்குனர் வி.வி.விநாயக் பெயர் அடிபட்டது. கடைசியில் இயக்குனர் மோகன்ராஜா லூசிபர் ரீமேக்கை இயக்குவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது

ஆனாலும் இவர்கள் யாராலும் லூசிபர் படத்தின் கதையை சிரஞ்சீவி விரும்பும் வகையில், தெலுங்கிற்கு ஏற்றமாதிரி மாற்றி, சிரஞ்சீவியை திருப்திப்படுத்த முடியவில்லையாம். இதனால் வேறு ஒரு இயக்குனரை ஒப்பந்தம் செய்யலாமா என மகன் ராம்சரணுடன் ஆலோசித்து வந்தார் சிரஞ்சீவி.

இந்தநிலையில் தனது நெருங்கிய வட்டாரத்தில் ஆலோசனை நடத்தியபின், தற்போது இந்தப்படத்தின் ரீமேக்கில் நடிக்கும் திட்டத்தையே கைவிடும் முடிவுக்கு சிரஞ்சீவி வந்துவிட்டார் என சொல்லப்படுகிறது. அதனால் வேறு ஒரு தயாரிப்பளருக்கு இதன் ரீமேக் உரிமையை அப்படியே ராம்சரண் கைமாற்றி விடுவார் என்றும் ஒரு பேச்சு அடிபடுகிறது..


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !