பஹத் பாசில் தெலுங்குப்பட தயாரிப்பாளர் திடீர் மரணம்
ADDED : 1639 days ago
தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் அனம் ரெட்டி கிருஷ்ணகுமார் இன்று காலை விசாகபட்டிணத்தில் திடீர் மாரடைப்பால் காலமானார். இவருக்கு வயது 66. தெலுங்கில் பல படங்களை தயாரித்துள்ள கிருஷ்ணகுமார், தற்போது அனுகோனி அதிதி என்கிற படத்தை, நாளை மறுநாள் (மே-28) ஒடிடியில் ரிலீஸ் செய்யும் ஏற்பாடுகளை செய்திருந்த நிலையில் தான், எதிர்பாராத விதமாக மரணத்தை தழுவியுள்ளார்.
இந்தப்படம் மலையாளத்தில் பஹத் பாசில், சாய் பல்லவி நடிப்பில் வெளியான அதிரன் படத்தின் தெலுங்கு மொழிமாற்று படமாக உருவாகியுள்ளது. அதுமட்டுமல்ல, மலையாளத்தில் வெற்றி பெற்ற 'தண்ணீர் மத்தான் தினங்கள்' என்கிற படத்தை ரீமேக் செய்யும் பணிகளிலும் ஈடுபட்டிருந்தாராம் கிருஷ்ணகுமார்.
இவரது மனைவியும் நடிகையுமான ஜோதி சில வருடங்களுக்கு முன்புதான் காலமானார். இவர்களுக்கு ஒரே ஒரு மகள் மட்டும் இருக்கிறார்.