தங்கை இயக்கத்தில் நடிக்க ரெடி - ஸ்ருதி
ADDED : 1593 days ago
நடிகை ஸ்ருதிஹாசன் இணையதளம் வாயிலாக அளித்த பேட்டி : ‛‛லாபம் படத்தில் நடித்தபோது மறைந்த இயக்குனர் ஜனநாதனிடம் கம்யூனிசம் பற்றி நிறைய கற்றுக் கொண்டேன். லாபம் படத்தில் நடித்தது சிறந்த அனுபவமாக இருந்தது. தங்கை அக்ஷராவுக்கு இயக்கத்தில் அதிக ஆர்வம். அவர் படம் இயக்கினால் எனக்கு ஏற்ற கதை அமைந்தால் நிச்சயம் நடிப்பேன். அப்பா தயாரிப்பில் அவர் நடிக்கும் விக்ரம் படத்தில் நடிக்க எனக்கு அழைப்பு வரவில்லை என்றார்.