உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஒரு வழியாக ஷாரூக்கானுக்கு கதை சொன்ன அட்லீ

ஒரு வழியாக ஷாரூக்கானுக்கு கதை சொன்ன அட்லீ

விஜய் நடித்த 'தெறி, மெர்சல், பிகில்' என மூன்று படங்களைக் கொடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் என இடம் பிடித்தவர் அட்லீ. இரண்டு வருடங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் போது ஷாரூக்கான், அட்லீ இருவரும் ஒன்றாக அமர்ந்து போட்டியை ரசித்தனர். அதன்பின் இருவரும் சந்தித்து பேசிக் கொண்டனர். அப்போதே ஷாரூக்கான் நடிக்கப் போகும் ஹிந்திப் படத்தை அட்லீ இயக்குவது குறித்து பேச்சுவார்த்தை நடந்ததாக செய்திகள் வெளிவந்தன.

பின்னர் மும்பையில் ஷாரூக்கான் பிறந்தநாள் நிகழ்விலும் அட்லீ கலந்து கொண்டார். ஆனால், அவர்கள் இணையும் படம் பற்றி இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

தற்போது அவர்கள் கூட்டணி பற்றி ஒரு புதிய தகவல் வெளிவந்துள்ளது. கடந்த மாதமே ஷாரூக்கை சந்தித்து அட்லீ படத்தின் முழு கதையையும் சொல்லிவிட்டாராம். ஷாரூக்கிற்கும் கதை பிடித்துவிட்டதாம், இந்த வருட இறுதியில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளதாக பாலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அட்லீயின் இரண்டு வருடக் காத்திருப்பு இந்த வருடக் கடைசியில் முடிவுக்கு வரும் என்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !