உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சஞ்சய் தத்துக்கு கோல்டன் விசா: துபாய் அரசு வழங்கியது

சஞ்சய் தத்துக்கு கோல்டன் விசா: துபாய் அரசு வழங்கியது

துபாய் அரசு பொதுவாக எந்த வெளிநாட்டினருக்கும் குடியுரிமை வழங்காது, பணி நிமித்தமாக, சுற்றுலா, கல்வி நிமித்தமாக தங்கிக் கொள்ளலாம். இதற்கு தான் விசா வழங்கும். கடந்த 2019ம் ஆண்டு இந்த விசா கொள்கையில் சில மாற்றங்களை கொண்டு வந்தது.

அதன்படி கோல்டன் விசாவை அறிமுகப்படுத்தியது. இந்த விசா பெற்றவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த ஒருவரின் சிபாரிசு இன்றியே அந்நாட்டில் தங்கி, படித்தோ, வேலை செய்தோ வாழ முடியும். இந்த விசாக்கள் 5 முதல் 10 வருட காலத்துக்கு வழங்கப்படும். பின் சம்பந்தப்பட்டவர் மீது எதுவும் பிரச்சினை இல்லை என்றால் தானாக புதுப்பிக்கப்படும். சிறந்த திறமையாளர்களும், உயர்ந்த சிந்தனையாளர்களும் நாட்டில் இருக்க வேண்டும் என்பதற்காக இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டதாக அரசாங்கம் அறிவித்திருந்தது.

இந்த திட்டம் இப்போது அமுலுக்கு வந்துள்ளது. இந்தியாவை சேர்ந்தவர்களுக்கான கோல்டன் விசா வழங்குவதின் முன்னோடியாக பாலிவுட் நடிகர் சஞ்சய்தத்துக்கு முதல் கோல்டன் விசாவை வழங்கி உள்ளது துபாய் அரசு. இதனை ஐக்கிய அரபு அமீரகத்தின் மேஜர் ஜெனரல் முகமது அல் மரியீன் வழங்கி உள்ளார். இதனை சஞ்ய்ததத் தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டு துபாய் அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !