உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 5 ஆண்டுகளாக குடும்பம் நடத்திவிட்டு ஏமாற்றிவிட்டார் : அதிமுக., மாஜி அமைச்சர் மீது நடிகை புகார்

5 ஆண்டுகளாக குடும்பம் நடத்திவிட்டு ஏமாற்றிவிட்டார் : அதிமுக., மாஜி அமைச்சர் மீது நடிகை புகார்

அதிமுகவை சேர்ந்த முன்னாள் தொழில்நுட்ப துறை அமைச்சர் மணிகண்டன் , 5 ஆண்டுகள் தன்னை ஏமாற்றி குடும்பம் நடத்திவிட்டு, மிரட்டுவதாக நாடோடி படத்தில் நடித்த துணை நடிகை சாந்தினி என்பவர் புகார் அளித்துள்ளார்.

சென்னை போலீசாரிடம் அளித்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது: முன்னாள் அமைச்சரான மணிகண்டன் என்னிடம் ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றினார். என்னை பாலியல் வன்கொடுமை செய்தார். பின்னர் திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து தொடர்பில் இருந்தார். 5 ஆண்டுகள் கணவன், மனைவி போல் வாழ்ந்தோம். நான் மூன்று முறை கர்ப்பமானேன். ஆனால் கட்டாயப்படுத்தி என்னை கருகலைப்பு செய்ய வைத்தார். அவருடன் தொடர்பில் இருந்த போது, ஆபாச புகைப்படங்களை அவர் எடுத்து வைத்திருந்தார்.

தற்போது மணிகண்டன் என்னை திருமணம் செய்ய மறுப்பதோடு, புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டுகிறார். கூலிப்படை வைத்து கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டுகிறார். எனது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் அழிக்க வேண்டும். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !