உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிரபாஸின் நேர்மைத்தன்மை : ஸ்ருதிஹாசன் தகவல்

பிரபாஸின் நேர்மைத்தன்மை : ஸ்ருதிஹாசன் தகவல்

சில வருடங்களாக பட வாய்ப்பில்லாமல் இருந்து வந்த ஸ்ருதிஹாசன், தமிழில் விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தில் நடித்திருக்கிறார். தெலுங்கில் கிராக், வக்கீல் சாப் படங்களில் நடித்தவர் தற்போது பிரபாசுடன் சலார் படம் மூலம் முதன்முறையாக இணைந்திருக்கிறார்.

இந்த படம் குறித்து ஸ்ருதிஹாசன் வெளியிட்டுள்ள செய்தியில், பிரசாந்த் நீல் இயக்கும் சலார் படம் பிரமாண்டமான பட்ஜெட்டில் அதிரடியான திரில்லர் கதையில் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு ஆரம்ப கட்டத்தில்தான் உள்ளது. இந்த படத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பது கிரேட் பீலிங்காக உள்ளது.

நான் இப்போதுவரை சலார் படத்தில் சில காட்சிகளில் மட்டுமே நடித்துள்ளேன். பிரபாசுடன் நடித்தது ஒரு நல்ல அனுபவம். பணிவுடன் நடந்து கொள்ளும் பிரபாஸ் ஒரு நேர்மைதன்மை கொண்ட நடிகர். அதனால் இயல்புநிலை திரும்பி மீண்டும் சலார் படத்தில் பிரபாசுடன் நடிப்பதற்கு ஆர்வமாக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார் ஸ்ருதிஹாசன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !