கொரோனாவால் ஏற்படும் மனநல பிரச்சினைகள் தீர்க்க அமைப்பு தொடங்கிய ஆமீர்கான் மகள்
கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் தற்போது கடினமான சூழல் நிலவி வருகிறது. மக்கள் இந்த நெருக்கடியை சமாளிக்க முடியாமல் மனதளவில் மிகுந்த மன உளைச்சலுக்கு மக்கள் உள்ளாகி வருகின்றனர். மக்கள் வீட்டுக்குள் அடங்கிக் கிடப்பதால் குடும்ப வன்முறைகள் பெருகி வருவதாகவும், மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஊரடங்கு காரணமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கிறது.
இந்நிலையில் மக்களின் மனநலத்தை பராமரிக்கும் வகையில் அமீர்கானின் மகள் ஐரா கான், அகஸ்து பவுண்டேஷன் என்ற அமைப்பை தொடங்கி உள்ளார் இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில் கூறியிருப்பதாவது:
இந்த இக்கட்டான காலத்தில் வாழ்க்கையை எளிதாக்கும் வழிமுறைகளை மக்களின் மனங்களில் புகுத்தவே இந்த முயற்சி. இதன்மூலம் நம்முடைய நலனையும் பாதுகாத்துக் கொள்ள இந்த பவுண்டேஷன் உதவும். இது என்னுடைய முதல் முயற்சி. மக்களுக்கு மன நலம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் முதல் நோக்கம் என்கிறார்.