கொரோனா காலத்தில் வெப் சீரிஸ் - தமன்னா உற்சாகம்
அழகே அழகை பார்த்து பொறாமை கொள்ளும் வெண்ணிற அழகி... ஆளை கவிழ்க்கும் அசைவுகளில் இளசுகளின் இதயங்களில் ஆட்டம் போடும் பேரழகி... கொரோனா சூழலில் தியேட்டர்கள் திறக்காத போதும் வெப் சீரிஸ் வழி நம் வீட்டு டிவிக்களில் ஜொலிக்கும் கிளாமர் நட்சத்திரம் தமன்னா மனம் திறக்கிறார்...
கொரோனாவில் மீண்ட நீங்கள் மக்களுக்கு சொல்வது ?
வீட்டை விட்டு வெளியே போகாதீங்க. அவசரத்திற்கு போனால் கூட இரண்டு மாஸ்க் மாட்டுங்க. ஒவ்வொருவரின் இறப்பு செய்தியை கேட்கும் போது பயமா இருக்கு. அரசு விதிமுறைகளை அவசியம் பின்பற்றுங்க. முடிந்த வரை எல்லாரும் தடுப்பூசி செலுத்திக்கோங்க.
நீங்கள் நடித்த நவம்பர் ஸ்டோரி ஓ.டி.டி.,க்கு எடுத்ததா ?
அது இரண்டு ஆண்டுகளுக்கு முன் கேட்ட கதை. அப்போ வெப் சீரிஸில் நடிக்க நிறைய கதைகள் கேட்டுட்டு இருந்தேன். அந்த அனுபவம் கொஞ்சம் புதுசா இருக்கும்னு தோணுச்சு. அதனால் அதை பயன்படுத்தினேன். ஒ.டி.டி., சினிமா மாதிரி இல்லை. வீட்ல உட்கார்ந்து பிடிச்சா பார்க்கலாம் இல்லாட்டிஆப் பண்ணிடலாம்.
நவம்பர் ஸ்டோரி படத்தில் உங்கள் கேரக்டர், கதை என்ன ?
ஒ.டி.டி., ரிலீஸ், தியேட்டர் ரிலீஸ் எப்படி நீங்க பார்க்குறீங்க?
இது ரொம்ப சவாலான நேரம்... எப்போ தியேட்டர் திறப்பாங்கன்னு தெரியல. திறந்தாலும் மக்கள் வருவாங்களான்னு சந்தேகம் தான். சினிமா என்றாலே தியேட்டரில் என்ஜாய் பண்ணி பார்ப்போம். ஆனால் இந்த சூழலில் ஓ.டி.டி., ஓகே தான். மக்கள் நிறைய பேரு பார்க்க வாய்ப்பு இருக்கு. எபிசோட் போல் வருவதால் அடுத்து என்ன நடக்கும்னு எதிர்பார்ப்பு இருக்கும்.
16 ஆண்டுகள் உங்க திரைப்பயணம் பற்றி சொல்லுங்களேன்?
ஒரு நடிகையா எனக்கு கிடைத்த எல்லா வாய்ப்புகளையும் நான் சரியா பயன்படுத்தி இருக்கேனு நினைக்கிறேன். ஒரு இமேஜ்க்குள் இருக்கணும் நினைக்கல. வித்தியாசமான கேரக்டர்கள் பண்ண தான் ரொம்ப ஆசைப்பட்டேன். அடுத்து புதுசா கிடைக்கும் வாய்ப்புகளை சரியா பயன்படுத்த நினைக்கிறேன்
அயன் படத்தில் உங்களை இயக்கிய கே.வி.ஆனந்த் குறித்து ?
என்ன நடந்துச்சுன்னு இன்னும் நம்பவே முடியல. இன்ஸ்டாகிராம் ஓபன் பண்ணா கே.வி., போட்டோ நிறைய இருந்தது ஒன்னும் புரியலை... குடும்பத்தில் ஒரு உறுப்பினரை இழக்கிறது பெரிய வலி தான். சீக்கிரமே அவர் பயணத்தை முடித்து கொண்டார்.
தமிழில் ஆக்சன்க்கு பின் அதிகம் நடிக்கவில்லை ஏன் ?
தெலுங்கில் நிறைய படங்கள் நடிச்சிட்டு இருக்கேன். இந்த கொரோனா சூழலில் பட வேலைகள் மெதுவா போகுது. சில கதைகள் கேட்டுகிட்டு இருக்கேன். இப்போ கிடைக்கிற நேரத்தில் சரியா பயன்படுத்தி வெப் சீரிஸில் கவனம் செலுத்துகிறேன்.