ஆஸ்கர் விருது விழா தள்ளி வைப்பு
ADDED : 1590 days ago
உலக சினிமாவின் மிக உயர்ந்த விருதாக கருதப்படுவது ஆஸ்கர். கடந்த 2 ஆண்டுகளாக ஆஸ்கர் விருது வழங்கும் விழா கொரோனா தொற்று பிரச்னையால் உரிய காலத்தில் நடத்தப்பட முடியவில்லை. 2020ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது விழா கடந்த ஏப்ரல் மாதம் 26ம் தேதி நடந்தது.
2021ம் ஆண்டுக்கான 94வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா 2022ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி நடக்கும் என்று ஆஸ்கர் விருது கமிட்டி அறிவித்திருந்தது. ஆனால் கொரோனா தொற்றின் 2வது அலை நீட்டித்துக் கொண்டே செல்வதால் தற்போது 2022ம் ஆண்டு மார்ச் மாதம் நடக்கும் என்று அறிவித்துள்ளது.
விழாவில் கலந்து கொள்ள விரும்பும் படங்களின் பரிசீலனை டிசம்பர் 31ம் தேதி வரை நடக்கும் என்றும், ஓடிடி தளங்களில் வெளியான படங்களும் போட்டிக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் ஆஸ்கர் அகாடமி அறிவித்துள்ளது.