ஓடிடியில் ராக்கி
ADDED : 1588 days ago
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வசந்த் ரவி நாயகனாக நடித்துள்ள படம் ‛ராக்கி'. முக்கிய வேடத்தில் இயக்குனர் பாரதிராஜா நடித்துள்ளார். இது ஒரு கேங்ஸ்டர் படம். இப்படத்தின் வெளியீட்டு உரிமையை விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இப்படத்தை தியேட்டரில் வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் கொரோனா பிரச்னையால் தியேட்டர் திறப்பில் சிக்கல் நீடிப்பதால் ஓடிடியில் இப்படத்தை வெளியிட பேச்சுவார்த்தை நடக்கிறது.