சொர்க்கத்தை காணலாம் - தர்ஷா
ADDED : 1588 days ago
சின்னத்திரையில் சீரியல்களிலும், குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை தர்ஷா குப்தா. தற்போது சினிமாவிலும் நாயகியாக நடிக்கிறார். மோகன் ஜி இயக்கத்தில் இவர் நடித்துள்ள ருத்ர தாண்டவம் படம் விரைவில் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் கொரோனா காலத்தில் கடந்த ஒருவாரமாக பல ஏழை, எளியவர்களுக்கு உணவளித்து வருகிறார். இதுதொடர்பான போட்டோ, வீடியோக்களை சமூகவலைதளத்தில் பதிவிட்டு வருபவர் இப்போது, ‛‛பசியோடு இருப்பவர்களுக்கு உணவு கொடுத்து பாருங்கள். நீங்கள் இறந்தபின் காணும் சொர்க்கத்தை ஒரு நொடிப் பொழுதில் காணலாம்'' என இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.