மகேஷ்பாபுவுக்கு வில்லன் அர்ஜூன்
ADDED : 1589 days ago
பரசுராம் இயக்கத்தில் மகேஷ்பாபு நடிப்பில் உருவாகி வரும் தெலுங்கு படம் ‛சர்காரு வாரி பட்டா'. கீர்த்தி சுரேஷ் நாயகி. இதன் முற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. கொரோனாவால் படப்பிடிப்பு தடைப்பட்டுள்ளது. இப்படத்தில் வில்லனாக நடிகர் அர்ஜூன் கமிட்டாகி உள்ளார். ஏற்கனவே தமிழில் ‛கடல், இரும்புத்திரை' உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்தவர் தெலுங்கிலும் வில்லனாக நடிக்க தயாராகிவிட்டார்.