மற்றவர்கள் கருத்து பற்றி கவலையில்லை - ரைசா
ADDED : 1752 days ago
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமான ரைசா வில்சன். இப்போது சில படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். சமூகவலைதளத்தில் சுறுசுறுப்பாக இருக்கும் இவர் அடிக்கடி கவர்ச்சி போட்டோக்களையும் வெளியிடுவார். சமீபத்தில் படு கவர்ச்சியான போட்டோ வெளியிட்டார். இதை பலரும் டிரோல் செய்தனர்.
அதற்கு ‛‛நீங்கள் வெறுப்பை உமிழ்ந்தால் எதிர்மறையானவர்கள் என்று பொருள். நடிகை பிகினி அணிவது சாதாரணம். இதை விட கவனம் செலுத்த நிறைய விஷயங்கள் உள்ளன. எனக்கு விருப்பமானதை உடுத்துகிறேன். மற்றவர்கள் கருத்து பற்றி கவலையில்லை'' என பதிலடி கொடுத்துள்ளார் ரைசா.