கொரோனா நிவாரண நிதியாக ரூ.1.01 கோடி வழங்கிய ஐசரி கணேஷ்
ADDED : 1587 days ago
கொரோனா இரண்டாவது அலைக்கு தமிழகமும் அதிக பாதிப்பை சந்தி்த்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த உதவிடும் வகையில் திரைப்பிரபலங்கள் பலரும் முதல்வரின் நிவாரண நிதிக்கு பணம் அளித்து வருகின்றனர். ரஜினி, அஜித், சூர்யா குடும்பத்தினர், விக்ரம், சிவகார்த்திகேயன், ஷங்கர், முருகதாஸ், ஐஸ்வர்யா ராஜேஷ், நிதி அகர்வால் உள்ளிட்ட பலர் நிதி உதவி அளித்துள்ளனர்.
இந்நிலையில் பிரபல தயாரிப்பாளரும், வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தருமான டாக்டர் ஐசரி கணேஷ், தனது மனைவி ஆர்த்தி , மகள் பிரீத்தா ஆகியோருடன் முதல்வர் ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சந்தித்தார். அப்போது தங்கள் சார்பில் கொரோனா நிவாரணப் பணிக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு கோடியே ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.