தயாரிப்பாளர் ஜி. ராமச்சந்திரன் மரணம்
ADDED : 1586 days ago
மனுநீதி, சவுண்ட் பார்ட்டி, காசு இருக்கணும், எங்க ராசி நல்ல ராசி, காதலியை காணவில்லை மற்றும் சில கன்னட படங்களை தயாரித்தவர் ஜிஆர் என்கிற ஜி.ராமச்சந்திரன். களத்தூர் கண்ணம்மா, நாட்டுப்புற பாட்டு, எட்டுபட்டி ராசா, வீர தாலாட்டு, ராஜாதி ராஜா, மனுநீதி உள்ளிட்ட பல படங்களில் நடித்தும் இருக்கிறார்.
73 வயதான ஜிஆர் உடல் நலக்குறைவு காரணமாக சில மாதங்களாக தொடர் சிகிச்சையில் இருந்து வந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு சிவகுமார், சாமி குமார் என்கிற இரு மகன்கள் உள்ளனர். சமீபத்தில் தான் அவரது மனைவி தயாரிப்பாளர் ஆர்.பி. பூரணி மாரடைப்பால் மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.