பைக்கிங் எனக்கு சிறகுகளை தருகிறது : ராய்லட்சுமி
ADDED : 1580 days ago
சினிமாவில் பரபரப்பு குறைந்து விட்டபோதும் சோசியல் மீடியாவில் பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் ராய்லட்சுமி. தற்போது அவரது கைவசம் கேங்ஸ்டர், ஜான்சி ஐபிஎஸ், ஆனந்த பைரவி என சில படங்கள் உள்ளன. இந்நிலையில் தற்போது பைக் ரேசர்களைப் போன்ற கெட்டப்பில் கறுப்பு உடையில் தான் பைக் ரைட் செய்யும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் ராய் லட்சுமி. அந்த வீடியோவில் படு ஸ்பீடாக இல்லாமல் ஸ்லோமோஷனில் ஸ்டைலாக ஓட்டி வருகிறார். அதோடு, பைக்கிங் எனக்கு சிறகுகளை தருகிறது என்றும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அவரது இந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.