தத்ரூப ஓவியர் இளையராஜா மறைவு
ADDED : 1586 days ago
இது ஓவியமா இல்லை நிஜமான மனிதர்களா என தனது தத்ரூபமான ஓவியங்களால் மெய்சிலிர்க்க வைத்தவர் ஓவியர் இளையராஜா(41). கிராம பின்னணியில் அவர் வரைந்த ஓவியங்களை கண்டு வியக்காதவர்களே இல்லை. அந்தளவுக்கு அந்த ஓவியத்தில் ஒரு உயிர் இருந்தது. இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இளையராஜா நேற்று நள்ளிரவில் மரணம் அடைந்தார். இவரது மறைவு பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
நடிகர் பார்த்திபன் டுவிட்டரில், ‛‛நண்பன்/அன்புத் தம்பி ஓவியர் இளையராஜா மறைவு, மன அதிர்ச்சியையும் தாளா துயரத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. ஆறுதல் எனக்கே தேவையெனும் போது அவர் குடும்பத்தாருக்கு எப்படி?
ஒரு நிகழ்வில் என்னைச் சந்திக்க ஓவியர் இளையராஜா 10 நிமிடங்களில் போர்ட்ரைட் வரைந்து கொடுத்தார். இவன் படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்ற வாய்ப்பு கொடுத்ததோடு, நாளைய இயக்குநர்கள் என்று பெயர் போட்டு இளையராஜாவை உற்சாகப்படுத்த, பின் உலக புகழ் பெற்று இன்று இவ்வுலகைப் பிரிந்தது/வருத்தம் என பதிவிட்டுள்ளார்.