உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜய் படத்தில் நடிப்பதை உறுதி செய்த யோகிபாபு

விஜய் படத்தில் நடிப்பதை உறுதி செய்த யோகிபாபு

சந்தானம், சூரி ஆகியோர் கொடுத்த இடைவெளியால், உள்ளே நுழைந்து குறுகிய காலத்தில் முன்னணி நகைச்சுவை நடிகராக வளர்ந்தவர் யோகிபாபு. ரஜினிகாந்த், அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து காமெடி காட்சிகளில் நடித்தவர், சில படங்களில் கதையின் நாயகனாவும் நடித்து வருகிறார். இந்தநிலையில் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் யோகிபாபுவும் நடிக்கிறார்.

ரசிகர் ஒருவர் யோகிபாபுவின் டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து எழுப்பிய கேள்விக்கு 'ஆமாம்ப்பா' என பதிலளித்து இதை உறுதி செய்துள்ளார் யோகிபாபு. நெல்சன் திலீப்குமாரின் முதல்படமான கோலமாவு கோகிலாவில் கதையின் நாயகனாக யோகிபாபு நடித்திருந்தார் என்பதும், மெர்சல், சர்கார் மற்றும் பிகில் ஆகிய படங்களை தொடர்ந்து விஜய்யுடன் நான்காவது முறையாக இவர் இணைந்து நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !