விருதுகளை குவிக்கும் மகாமுனி
ADDED : 1664 days ago
சாந்தகுமார் இயக்கத்தில் ஆர்யா, இந்துஜா, மகிமா நடித்து 2019ல் வெளியாகி, பாராட்டை பெற்ற படம் ‛மகாமுனி'. இப்படம் ஏற்கனவே சில பட விழாக்களில் பங்கேற்று விருதுகளை வென்றது. இப்போதும் விருதுகளை வென்று வருகிறது. இதுப்பற்றி படக்குழு கூறுகையில், ‛‛மகாமுனி படம் 9 சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. 2 விருதுகள் உறுதியாகி உள்ளன. மேலும் இரண்டு விருதுக்கான போட்டிக்கு தேர்வாகி உள்ளது'' என தெரிவித்துள்ளனர். இப்படம் மேலும் பல விருதுகளை வென்று வருவது ஆர்யா உள்ளிட்ட படக்குழுவை மகழ்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.