உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நாகசைதன்யாவின் ஹிந்தி படப்பிடிப்பு நிறுத்தம்

நாகசைதன்யாவின் ஹிந்தி படப்பிடிப்பு நிறுத்தம்

தெலுங்கில் சேகர் கம்முலா இயக்கத்தில் நாக சைதன்யா - சாய்பல்லவி நடித்துள்ள படம் லவ் ஸ்டோரி. அனைத்துக்கட்ட பணிகளும் முடிவடைந்துள்ள இப்படம் ரிலீசுக்காக வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறது. இதையடுத்து அமீர்கான் ஹிந்தியில் நடிக்கும் லால் சிங் தத்தா என்ற படத்தில் நடிக்கிறார் நாகசைதன்யா. அந்தவகையில் சமந்தா, தி பேமிலிமேன்-2 வெப் தொடர் மூலம் ஹிந்தியில் அறிமுகமானது போன்று லால் சிங் தத்தா படம் மூலம் ஹிந்தியில் அறிமுகமாகப்போகிறார் நாகசைதன்யா.

இந்நிலையில் கார்கில் பகுதியில் நடைபெறயிருந்த இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள தயாராகிக் கொண்டிருந்தார் நாகசைதன்யா. ஆனால் கொரோனா தொற்று காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அடுத்து ஜூலையில் படப்பிடிப்பை தொடர திட்டமிட்டுள்ளனர். மேலும் ஹிந்தியில் அமீர்கான் படங்களில் மாதவன், சித்தார்த் போன்ற நடிகர்கள் நடித்து பிரபலமானதைத் தொடர்ந்து இப்போது நாகசைதன்யாவும் அவர் படத்தில் அறிமுகமாகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !