சிரஞ்சீவி - ராம்சரணை பாராட்டிய சோனு சூட்
கடந்த ஆண்டு கொரோனா தொற்று காலகட்டத்தில் ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊர் களுக்கு செல்ல உதவி செய்தவர் பாலிவுட் நடிகர் சோனுசூட். அதேபோல் இந்த ஆண்டு கொரோனா இரண்டாவது அலையின்போதும் ஆக்சிஜன் வசதியை ஏற்படுத்தி வருகிறார். இதனால் அவரை சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகிறார்கள்.
அதேபோல் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியும் அவரது மகன் ராம்சரணும் ஆக்சிஜன் பேங்க் ஒன்றை தொடங்கி அதன்மூலம் பொதுமக்களுக்கு உதவி செய்து வருகிறார்கள். இதையடுத்து சோனுசூட் அளித்துள்ள ஒரு பேட்டியில், சிரஞ்சீவி - ராம்சரண் ஆகிய இருவரும் ஆக்சிஜன் வங்கி மூலம் கொரோனா நோயாளிகளுக்கு உதவி செய்து வருவதாக அறிந்தேன். இது ஒரு பாராட்டத்தக்க செயல். இதற்காக அவர்களை நான் மனதார பாராட்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது தெலுங்கில் சிரஞ்சீவி-ராம்சரண் நடித்து வரும் ஆச்சார்யா படத்தில் சோனுசூட்டும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.