மோகன்பாபுவுக்காக இணைந்த சிரஞ்சீவி - சூர்யா
ADDED : 1600 days ago
தெலுங்கில் மோகன்பாபு நடித்து வரும் படம் சன் ஆப் இந்தியா. டயமண்ட் ரத்னபாபு இயக்கும் இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது . அதில் மோகன் பாபுவை அறிமுகம் செய்யும் வாய்ஸ் ஓவரை சிரஞ்சீவி கொடுத்துள்ளார். அதேபோல் இந்த டீசரை சூர்யா வெளியிட்டுள்ளார். இதனால் சன்ஆப் இந்தியா டீசர் எதிர்பார்த்ததை விடவும் பெரிய அளவில் ரீச் ஆகியுள்ளது.
அந்தவகையில் தனது படத்தின் டீசருக்கு சிரஞ்சீவி, சூர்யாவின் பங்களிப்பு கிடைத்ததால் மகிழ்ச்சியடைந்துள்ள மோகன்பாபு, அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும், சுதா இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான சூரரைப்போற்று படத்தில் பக்தவச்சலம் நாயுடு என்ற வேடத்தில் மோகன்பாபு நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.