தயாரிப்பாளர்கள் ரூ.10 லட்சம் உதவி
ADDED : 1582 days ago
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையும், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் ரோட்டரி கிளப் இணைந்து தடுப்பூசி முகாமை சென்னையில் நடத்தினர். சட்டசபை உறுப்பினரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில், மக்கள் நலவாழ்வு மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் தயாரிப்பாளர்கள் சார்பில் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு 10லட்ச ரூபாய் நிதியுதவி தரப்பட்டது.